காத்தான்குடியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற; 35 வது ஷூஹதாக்கள் தினம்.!!!
(ஜே.கே)
காத்தான்குடி பள்ளிவாயல்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க பயங்கரவாதவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் 35வது வருட நினைவு தினம் இன்று 03) காத்தான்குடியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. இதனையொட்டி காத்தான்குடி பிரதேசமெங்கும் இன்று பூரண கடையடைப்பும், துக்க தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. நகரின் பல இடங்களில் வெள்ளைக் கொடிகள் போடப்பட்டு துக்க தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி காத்தான்குடி மீரா ஜும்பா பள்ளிவாயல், காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாயல் ஆகிய இரு பள்ளிவாயல்களில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டு 268 முஸ்லிம்கள் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவத்தின் 33 ஆவது நினைவு வருட நினைவு தினம் இன்று ஆகும். இதனை ஒட்டியே இன்றைய தினத்தை காத்தான்குடி மக்கள் துக்கதினமாகவும் அனுஷ்டித்து வருகின்றனர்.
இது தொடர்பாக படுகொலை இடம்பெற்ற மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா பள்ளிவாயலில் விஷேட துஆ பிரார்த்தனையும் சமய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. துஆ பிரார்த்தனையை மௌலவி ஏஜீஏம்.அமீன் பலாஹி நிகழ்த்தினார். மௌலவி இனாமுல் ஹசன் ஞாபகார்த்த உரையை நிகழ்த்தினார்.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்எல்ஏ எம்.ஹிஸ்புல்லாஹ், எம்எஸ்.உதுமாலெப்பை, அப்துல் வாஸித் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.













