உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடியில் மாட்டு இறைச்சிக்கு; கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்.!!!

காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களின் மாட்டு இறைச்சி விலை நிர்ணயம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் இறைச்சி கடை உரிமையாளர்களுடன் நகரசபை சபா மண்டபத்தில் இன்று (26) நடைபெற்றது.

இதன்போது

1kg தனி இறைச்சியின் விலை ரூபா 2300 க்கும்

1kg முள்ளுடன் இறைச்சி (750g இறைச்சி 250g முள்ளு) ரூபா 2000 க்கும்

1kg ஈரல் ரூபா 2600 க்கும்

1Kg குடல் ரூபா 1200 க்கும்

1kg நுரையீரல் ரூபா 2000 க்கும்

1kg தனி முள்ளு ரூபா 1000 க்கும்

1 மூளை ரூபா 700 க்கும்

27.07.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் விற்பனை செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் சகல மாட்டு இறைச்சி கடைகளிலும் விலை பட்டியலை காட்சிப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பாக உடனடியாக நகரசபைக்கோ அல்லது நகரமுதல்வருக்கோ அறிவிக்குமாறும் பொதுமக்களை வேண்டிக்கொள்கிறோம்.

(ஊடகப் பிரிவு)

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713964

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time