கிளீன் காத்தான்குடி அமைப்பால் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் கௌரவிப்பு.!!!
கிளீன் காத்தான்குடி அமைப்பினர் ஏற்பாடு செய்த, காத்தான்குடி நகர சபையில் கடமை புரியும் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கையுறை மற்றும் பகலுணவு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி வெல்கம் மண்டபத்தில் இன்று (14) கிளீன் காத்தான்குடி அமைப்பின் தலைவரும், முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் ஜேபி தலைமையில் காத்தான்குடி வெல்கம் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் பிரதம அதிதியாகவும், நகரசபை செயலாளர் திருமதி ரிப்கா சபீன் கௌரவ அதிதியாகவும், கஃபே தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மாஸ் மக்கீன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கிளீன் காத்தான்குடி அமைப்பின் உப தலைவரும், முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான கவிஞர் இல்மி அஹமட் லெப்பை ஜேபி, பொருளாளர் தேசமான்ய அல்ஹாஜ் ஏ.எல்.எம்.மீராசாஹிபு, ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எம்.நஸீர், அமைப்பின் செயலாளர் கவிமேகம் எப்.எம்.இக்பால்கான், உப தலைவர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.ஏ.எம்.பஷீர், உப செயலாளர் எம்.ஏ.எம்.நிவாஸ், உப பொருளாளர் அல்ஹாஜ் எம்.ஏ.றஸீத் , நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அல்ஹாபிழ் அஷ்ஷெய்க் அஸ்ஹர் ஜமாலி, அல்ஹாஜ் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி, கவிஞர் எம்.ரி.எம்.யூனுஸ், கலைமதி எம்.ஏ.சீ.றபாய்தீன், கவி மேகம் உஸனார் ஜாபீர், கஃபே பிரதிநிதிகள், நகரசபை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






