உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவான; உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைக்கு தெரிவாகிய நகர முதல்வர், பிரதி நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள், மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர், சுயேட்சை குழு உறுப்பினர் ஆகியோருக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நேற்று (01) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் சட்டமுதுமாணி றஊப் ஹக்கீம், கட்சியின் பிரதித் தலைவா் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளா் எம்.எஸ்.உதுமா லெப்பை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் றஊப் ஹக்கீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன் கட்சியின் தலைவர் கட்சி ஆதரவாளர்களால் கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714080

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time