காத்தான்குடி நகர சபையின்; SMART CITY சேவை அறிமுகம்.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி நகர சபையினால் வடிவமைக்கப்பட்ட SMART CITY திட்ட அறிமுகமும் மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (02) நகர சபை காரியாலயத்தில் நடைபெற்றது.
நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா சபீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம்.பைஸல்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பார்த்தீபன் , காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவ்ஜூத் மற்றும் மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
SMART CITY செயலியை காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி ரிப்கா சபீன் அறிமுகப்படுத்தினார் அவ் அறிமுகத்தின் போது உரையாற்றிய அவர் SMART CITY செயலி ஊடாக காத்தான்குடி நகர சபையின் நிர்வாக சேவையை பொதுமக்கள் இலகுவாக பயண்படுத்திக்கொள்வதுடன் கட்டணங்களை இலகுவாக செலுத்தும் வசதிகள், முறைப்பாடுகளை உரிய அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுதல் போன்றவற்றை துரிதமாக மேற்கொள்ள முடியும்.
இதன் மூலம் பொதுமக்கள் இலகுவாக நகரசபை சேவையை பெற்றுக்கொள்வதுடன் காகித பயன்பாடு மற்றும் நேர விரயத்தை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.





