உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி நகரசபை – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடையே இடம்பெற்ற; முக்கிய கலந்துரையாடல்.!!!

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடனான முக்கிய சந்திப்பு 23.06.2025 இன்று நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கௌரவ பிரதி நகர முதல்வர் MIM ஜெஸீம் JP, கௌரவ நகரசபை உறுப்பினர்களான ஜவாஹிர் JP, றுஸ்வின் JP, சல்மா ஹம்சா JP, ஹம்தூன் JP, ஸாஹிர் JP, அஜ்வத் மௌலவி JP, Eng றியாஜ் மஹ்மூத் JP, றிஸ்வி JP, றாசிக் JP, வர்த்தக சங்க பிரதிநிதிகள் நகரசபை நிருவாக உத்தியோகத்தர் திருமதி றினோஸா முப்லி மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது எமது ஊரில் அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டிய பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

அவற்றுள் குறிப்பாக;

1. பாதசாரிகளின் நடைபாதையில் வியாபார தளங்களை அமைத்துள்ள வர்த்தகர்கள் மீதான சட்ட நடவடிக்கை.

2. எனது ஊரில் அதிகரித்து வருகின்ற கட்டாக்காலி நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்துதல்.

3. மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நேரத்தில் வீதிகளை மறித்து கல், மண் கொட்டுவதை ஒழுங்கு படுத்துதல்.

4. வீதிகளில் முறையற்ற வகையில் வாகனம் நிறுத்துவதை ஒழுங்குபடுத்துதல்.

5. காத்தான்குடி நகர சபைக்கான தீயணைப்பு படை பிரிவு மற்றும் பாதுகாப்பு படை பிரிவு ஒன்றினை ஆரம்பித்தல்.

6. காத்தான்குடி கடற்கரை வீதி, டெலிகொம் வீதி ஆகியவற்றில் ஒற்றை, இரட்டை நாட்கள் வாகன தரிப்பிடத்தை நடைமுறைப்படுத்துதல்.

7. தலைக்கவசம் இன்றி பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

8. பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்கின்ற மாணவிகளுக்கு இடையூறு செய்யும் இளைஞர்களுக்கும், சாரதி அனுமதிப் பத்திரமின்றி, தலைக்கவசமின்றி மோட்டார் வாகனம் செலுத்தும் நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.

போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதோடு உடனடியாக காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையம் என்பன இணைந்து எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714032

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time