உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி பிரதேச; வெள்ள அனர்த்தம் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

UN- Habitat நிறுவனம் நாட்டில் வெள்ளம் மற்றும் அனர்த்தங்களின் போது ஏற்படுகின்ற பாதிப்புகளை தவிர்க்கும் நோக்கோடு நாட்டிலுள்ள குளங்கள், வாவிகள், தோனாக்களை புனரமைக்கின்ற ஒரு பாரிய திட்டத்தை உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றது.

மழை காலங்களில் காத்தான்குடி பிரதேசத்தில் தொடராக ஏற்பட்டு வருகின்ற வெள்ள அனர்த்தம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற மக்கள் பாதிப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் புதன் கிழமை (18) காத்தான்குடி நகர சபை தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது காத்தான்குடியில் உள்ள தோணாக்களை மறுசீரமைக்கின்ற திட்டங்களும், நில வாட்டத்தோடு ஒருமித்த வகையில் வடிகாண்களின் கொள்ளளவை அதிகரிக்கும் வண்ணம் அவற்றை மீள்கட்டமைக்கின்ற ஆலோசனைகளும் கலந்துரையாடப்பட்டன.

நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், நகரசபையின் நிருவாக உத்தியோகத்தர், UN- Habitat நிறுவன பொறியியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714041

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time