உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடியில் இளைஞர்களுக்கான; சமூக வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம்.!!!

(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்)

நல்லிணக்கத்திற்கான மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் இளைஞர்களை இணைத்தல் எனும் சமூக வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (07) திங்கட்கிழமை காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி அனீஸா பிர்தெளஸ் தலைமையி இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் கலந்து கொண்டார்.

அதிகளவான இளைஞர் யுவதிகளின் பங்கு பற்றுதலுடன் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஜே.எம். அப்துல் கபூர் மதனி , பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல் நசூருதீன், மத்தியஸ்த சபைத் தலைவர் எம்.மஹ்சூம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.இர்ஷாத் , ஜம்இயத்துல் உலமா சபை செயலாளர் எம்.ஜவாஹீர் மெளலவி பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713999

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time