அல் ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர்களால்; மடிக் கணினி மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி மட்/மம/அல் ஹிறா மகா வித்தியாலயத்தின் 1988 க.பொ.த (சா/த) பழைய மாணவர்களினால் பாடசாலை மாணவர்களின் கல்வி மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் 10 மடிக்கணினிகள் மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை( 07) பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.பீ.எம்.றபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் கே.எல்.எம்.ஜே .அறபாத், முன்னாள் செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான ஏ.எல்.கரீம், ஏ.எல்.ஏ.அஸீஸ், பழைய மாணவர் சங்க செயலாளர் ஏ.ஆர்.சப்ரி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான மடிக்கணினிகள் மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் 1988 க.பொ.த (சா/த) பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர்,பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.














