காத்தான்குடியில் 800 பெண்களுக்கு இப்தாா் – முஸ்லிம் பெண்கள் காப்பகம் ஏற்பாடு.!!!
எம்.ஐ.அப்துல் நஸாா்
காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில் 800 பெண்களுக்கான இப்தாா் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (16) முஸ்லிம் பெண்கள் காப்பகத்தில் அதன் பணிப்பாளா் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் சல்மா அமீா் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக கண்டியைச் சோந்த தொழிலதிபரும் பிரபல சமூக சேவையாளருமான அல்ஹாஜ் எஸ்.எம்.நஸீா்கான் கலந்துகொண்டிருந்தாா்.
நிகழ்வின் இப்தாா் சிந்தைனை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.எம்.இல்ஹாம் பலாஹி அவா்களால் வழங்கப்பட்டது.
இப்தாா் நிகழ்வினைத் தொடா்ந்து
முஸ்லிம் பெண்கள் காப்பகத்தில் பராமாிக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கைப்பணிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சிக்கூடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடா்ந்து கைப்பணிப் பொருட்களின் விற்பனையும் இடம்பெற்றது. அடுத்துவரும் சல தினங்களுக்கு கைப்பணிப் பொருட்களின் விற்பனை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளா்கள் தொிவித்தனா்.
அம்பாறை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாாி டாக்டா் ஐ.எல்.எம்.றிபாஸ், காத்தான்குடி மீடியா போரத்தின் ஆயுட்காலத் தலைவா் மௌலவி எஸ.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), சமூக சேவையாளா் அல்ஹாஜ் அமீா் ஹம்ஸா, காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் நம்பிக்கையாளா் சபை உறுப்பினா் அல்ஹாஜ் எம்.அப்துல் வஹாப், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் உறுப்பினா்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன உறுப்பினா்கள், நிகழ்வின் பிரதம அதிதி அல்ஹாஜ் எஸ்.எம்.நஸீா்கான் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள், வா்த்தகா்கள், ஊா் பிரமுகா்கள், ஊடகவியலாளா்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்
கடந்த ஏழு ஆண்டுகளாக முஸ்லிம் பெண்கள் காப்பகம் காத்தான்குடியில் இயங்கி வருவதோடு, தற்போது 35 போ் பாராமாிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







