காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!
கடந்த 2024 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் அரசியல் சமூக செயற்பாட்டாளர் ஆதம் எஹ்யா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்களினால் விளையாட்டுத்துறை முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் தேக ஆரோக்கியம் தலைமைத்துவ பண்பு விருத்தி கருதி காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பல விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது
இதில் குபா விளையாட்டு கழகத்துக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் (16) குபா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆதம் எஹ்யா அவர்களினால் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான தடகள மற்றும் கிரிக்கெட் விளையாட்டுக்கான உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
குபா விளையாட்டு கழகத்தினரால் முன்னாள் ஆளுநர் அல்ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்களுக்கும் உபகரணங்களை பெற்றுத் தந்து உதவிய ஆதம் எஹ்யா அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்

