உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

குருக்கள்மடம் – மனிதப் புதைகுழி  வழக்கு; ஆகஸ்ட் 25ம் திகதி ஒத்திவைப்பு.!!!

•சட்டமா அதிபரை பிரதி நிதித்துவப்படுத்தி எவரும் ஆஜராகி இருக்க வில்லை.

•காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திலிருந்து இரண்டு சட்டத்தரணிகள் ஆஜாராகி சமர்ப்பணங்களை முன் வைத்தனர். 

•அடுத்த தவனைக்கு திட்ட வரைபை முன் வைக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் கட்டளை.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தோண்டப்படல் வேண்டும் என்ற வழக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (21) திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமள்றத்தில் மீள விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இதன் கடந்த வழக்கில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மற்றும் சட்டமா அதிபருக்கு; 21ம் திகதி திங்கட்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு களுவாஞ்சிகுடி நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

எனினும் இன்றைய (21) திங்கட்கிழகமை இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரை பிரதி நிதித்துவப்படுத்தி எவரும் ஆஜராகி இருக்க வில்லை. எனினும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திலிருந்து இரண்டு சட்டத்தரணிகள் ஆஜாராகி சமர்ப்பணங்களை முன் வைத்தனர்.

அவர்கள் களுவாஞ்சிகுடி நீதமன்றத்துக்கு காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஒரு விரிவான கடிதத்தினை ஏற்கனவே அனுப்பியிருந்ததாகவும் குருக்கள் மடம் மனித புதை குழி தோண்ட வேண்;டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவும் அதே நிலைப்பாட்டியிலேயே தற்போதும் இருப்பதாகவும் கூறினார்கள்.

இவற்றை செவிமடுத்த நீதிபதி ஏற்கனவே திட்ட வரைபு ஒன்று சட்ட வைத்திய அதிகாரியினால் நீதி மன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அது 2020ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டதால் கால மாற்றத்தினால் அததை மீளாய்வு செய்து மீள அந்த திட்ட வரைபை நீதிமன்றத்துக்கு அடுத்த தவனையின் போது சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் கட்டளையிட்டார்.

அத்துடன் அடுத்த தவனையான 25.08.2025ம் திகதி சட்டமா அதிபரை ஆஜராகுமாறும் கட்டளையிட்ட நீதவான் அடுத்த மாதம் ஆகஸ்ட் 25ம் திகதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார் என குரல்கள் அமைப்பின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்

குறித்த இவ் வழக்கில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துர் ரஊப் நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்ததுடன் அவரின் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகிஇருந்தனர்.

12.07.1990 ஆந் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய காத்தான்குடியைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்படட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இடம் பெற்று சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தை தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையாக்கி இருந்த நிலையில் 04.10.2020ல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பிலிடப்பட்டிருந்தது.

இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அபதுர் ரவூப் என்பவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 11.07.2025ந் திகதியாகிய வெள்ளிக்கிழமை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கானது திறந்த மன்றில் மீள எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-எம் எஸ் எம் நூர்தீன்-

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713974

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time