காத்தான்குடியில் இடம்பெற்ற இரத்ததான முகாமில் – பெருமளவிலான குருதிக் கொடையாளர்கள் பங்கேற்பு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், காத்தான்குடி செஞ்சிலுவைச் சங்க கிளையின் 11வது தடவையாக ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்றது.
காத்தான்குடி செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவர் எம்.ஐ.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில், காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் அலிமா ரஹ்மான் தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெருமளவிலான குருதிக்கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து, தங்களது இரத்தத்தினை வழங்கி மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தினர்.
இம்முகாமில் காத்தான்குடி குருதிக்கொடையாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளை நிருவாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.








