உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காத்தான்குடியில் இடம்பெற்ற இரத்ததான முகாமில் – பெருமளவிலான குருதிக் கொடையாளர்கள் பங்கேற்பு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், காத்தான்குடி செஞ்சிலுவைச் சங்க கிளையின் 11வது தடவையாக ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (01) இடம்பெற்றது.

காத்தான்குடி செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவர் எம்.ஐ.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில், காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் அலிமா ரஹ்மான் தலைமையிலான குழுவினர்  பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெருமளவிலான குருதிக்கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து, தங்களது இரத்தத்தினை வழங்கி மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தினர்.

இம்முகாமில் காத்தான்குடி குருதிக்கொடையாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி கிளை நிருவாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1080601

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time