உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!!!
(ஜே.கே)
உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (03) இடம் பெற்றது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயற்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல் இதன் போது வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளதுடன் 144 வாக்கெண்ணும் நிலையங்கள் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



