தக்வா நகர் மக்களின் கோரிக்கைகயை நிறைவேற்றினார்; நகர சபை உறுப்பினர் ஜவாஹிர்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
தேர்தல் காலங்களில் மக்கள் முன்னிலையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக நகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். ஜவாஹிர் அவர்களினால் அல் அக்ஸா வட்டாரத்தில் பல்வேறு விதமான அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் மணல் வீதிகளாக காணப்பட்ட பல வீதிகளுக்கு தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சல்லிக் கற்களை பயன்படுத்தி வீதிகளை புனரமைக்கும் பணிகள் நகர சபை உறுப்பினரால் மூன்றாவது தடவையாக இன்று (30) இடம்பெற்றது.
தக்வா நகர் நான்காவது குறுக்கு வீதிக்கு சல்லிக் கற்களை இட்டு, வீதி அமைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்துக்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
மழை காலங்களில் மக்கள் பல்வேறு வகையான இன்னல்களை தொடர்ச்சியாக அனுபவித்து வந்த நிலையில், மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இவ்வீதி செப்பணிடும் பணிகள் காத்தான்குடி நகர சபை, நகர சபை ஊழியர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இவ் வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







