மஞ்சந்தொடுவாயில் – 1ஆவது மாபெரும் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவு.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
மஞ்சந்தொடுவாய் லயன்ஸ் விளையாட்டு கழகம் மற்றும் எமர்ஜென்ஸி விளையாட்டு கழகம் இணைந்து ஏற்பாடு செய்த 1ஆவது மாபெரும் இரத்ததான முகாம், இன்று (14) ஞாயிற்றுக்கிழமை மஞ்சந்தொடுவாய் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.எம். லத்தீப் தலைமையில் இடமபெற்றது.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவி வரும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் டி. நிசாந்தினி அவர்களின் ஒருங்கிணைப்பில், இரத்த வங்கியில் கடமையாற்றும் வைத்தியர் சஞ்சீதா அவர்களின் மேற்பார்வையில் இந்த இரத்ததான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த முகாமில் பெருமளவிலான ஆண், பெண் இரத்தக் கொடையாளர்கள் பங்கேற்று, மனிதாபிமான நோக்குடன் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வு சமூகப் பொறுப்புணர்வையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் சிறந்த முயற்சியாகப் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












