உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

2025 டிசம்பர் 26 முதல் 2026 ஜனவரி 4 வரை தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்ரஸாக்களுக்கு கட்டாய விடுமுறை – காத்தான்குடி நகரசபை அறிவிப்பு.!!!

காத்தான்குடி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள், குர்ஆன் மதரஸாக்கள் மற்றும் மார்க்க ஷரீஆவை பயிற்றுவிக்கும் மதரஸாக்களின் நேர ஒழுங்கு, விடுமுறை, சுகாதாரம் மற்றும் சமூக ரீதியான விடயங்கள் தொடர்பாக, காத்தான்குடி நகரசபையின் கௌரவ மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பொதுச்சபை அமர்வில் பெறப்பட்ட தீர்மானத்திற்கமைய,

2025.10.29 ஆம் திகதி மேற்கூறப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மதரஸாக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அக் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், வருட இறுதியில் அரச பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறைக்காலத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள், குர்ஆன் மதரஸாக்கள், மார்க்க ஷரீஆவை பயிற்றுவிக்கும் மதரஸாக்கள் ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் பயிலும் மாணவ, மாணவியருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 2025.12.26 ஆம் திகதி தொடக்கம் 2026.01.04 ஆம் திகதி வரை வழங்கப்படும் பாடசாலை விடுமுறைக்காலத்தில், மேற்கூறப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் தம்மிடம் கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்படி தீர்மானத்தினை கடைத்பிடிக்காத நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இதன் மூலம் அறியத்தருகின்றேன்.

SHM அஸ்பர் JP UM ,

நகர முதல்வர்,

நகர சபை,

காத்தான்குடி.

 

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702990

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time