உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மனித பாவனைக்கு உதவாத: 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சி; சுகாதார அதிகாரிகளினால் மட்டக்களப்பில் கைப்பற்றல் – இருவர் கைது.!!!

(ஜே.கே)

முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (sausages) மட்டக்களப்பு நகரில் நேற்று (22) மாலை சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளத்துடன் அவற்றை எடுத்து வர பயன்படுத்திய வாகனம் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு வேதாரணியம் வீதியில் வைத்து குறித்த வாகனத்தை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர்கள் அதிலிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நானூறு கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்

முறையாக குளிரூட்டப்படாமையினால் குறித்த இறைச்சி உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி உள்ளதாகவும் மனித பாவனைக்கு உதவாதது எனவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் இன்றுவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713970

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time