உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது; உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு.!!!

(நூருல் ஹுதா உமர்)

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகத்தில் நேற்று (25) திடீர் சோதனை செய்யப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் அவர்கள் உடனடியாக செயல்பட்டு உணவு கையாளும் நிறுவனத்தினை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இதன் போது குறித்த நிறுவனத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்காக வெளிக்காட்டப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உணவாக உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே உங்களது முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு அறியத்தாருங்கள் QR code ஊடாக வழங்கப்படும் பட்சத்தில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714159

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time