உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மரணவிசாரணை அதிகாரிளுக்கான தடயவியல் மருத்துவ செயலமர்வு; மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக ஏழு பேர் பங்கேற்பு.!!!

(ஏறாவூர் நஸீர்)

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினால், நடாத்தப்பட்ட தடயவியல் மருத்துவம் தொடர்பான பாடநெறி 28/05, 29/05 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இப் பாடநெறியில் இலங்கையிலுள்ள அனைத்து மரண விசாரணை அதிகாரிகளும் பங்கு கொள்ளும் வகையில் மூன்று தடவைகளில் இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது செயலமர்வில் காத்தான்குடியை சேர்ந்த அஹமட் சின்னலெப்பை (ISD) அவர்கள் கலந்து கொண்டதோடு, மூன்றாவது செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் MSM. நஸீர், P.ரமேஷ் ஆனந்தன் , S.ஜீவரெத்தினம் , K.பவளகேசன், VR.மகேந்திரன், AM. உசனார் ஆகிய ஆறு மரண விசாரரணை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 45 க்கும் மேற்பட்ட மரண விசாரணை அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சங்கம் சார்பாக, பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரு நாள் செயலமர்வில்

மருத்துவ பீட , பீடாதிபதி பேராசிரியர் Dr அமல் வெதசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு ,விரிவுரையாளர் Dr.சதுர விக்கிரமசிங்க (Acting Consultant JMO) , குருநாகல் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி Dr S. சித்தீக் (Acting Consultant JMO) , தடயவியல் மருத்துவ விரிவுரையாளர் Dr.கசுன் ஏகநாயக்க ( Registrar in Forensic Medicine) , பேராசிரியர் டினேஸ் பெர்னான்டோ ( Professor & Consultant JMO), பேராசிரியர் சரத்சந்திர கொடிகார ( Senior Professor & Consultant JMO) , கண்டி பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி Dr அமீன் இஸ்ஸத் ( Consultant JMO) ஆகியோர் விரிவுரையாளர்களாக கலந்து கொண்டு ,திடீர் மரணம் தொடர்பான தடயவியல் விபரங்களை மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் பல்வேறு ஆதாரங்களுடன் விரிவுரை நிகழ்த்தினர்.

நிகழ்வின் முடிவில் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதியினதும், தடயவியல் மருத்துவ பிரிவின் இணைப்பாளரினதும் கையெழுத்திடப்பட்ட சான்றிதழ்களும் பங்குபற்றிய அனைத்து மரண விசாரணை அதிகாரிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714086

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time