உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

மர்ஹூம் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின்; 9வது வருட ஞாபகார்த்த நிகழ்வு.!!!

(எம் எஸ் எம் நூர்தீன்)

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் மர்ஹூம் ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ரஹ்மானி ஹஸரத் அவர்களின் 9வது வருட ஞாபகார்த்த நிகழ்வு இன்று (06) ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹசரத் அவர்களின் ஞாபகார்த்தமாக புனித அல் குர்ஆன் ஓதப்பட்டு விஷேட பிராத்தனையும் இடம் பெற்றதுடன் விஷேட உரையை மெளலவி கே.எம்.எம்.மனசூர் பலாஹி நிகழ்த்தினார்

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பின் (மஜ்லிசுல் பலாஹீன்) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் உட்பட கல்லூரி அதிபர் பிரதி அதிபர் நிருவாகிகள் பழைய மாணவர் அமைப்பின் பிரதி நிதிகள் உலமாக்கள் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது

ஷைகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் 2016 ம் ஆண்டு முஹர்ரம் மாதம் 10ம் நாள் இறையடி சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Related News

Total Websites Views

Total Views: 242185

Search

விளம்பரங்கள்