உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இலவச மருத்துவ முகாமில்; பெருமளவிலான மக்கள் பங்கேற்பு – மருத்துவ ஆலோசனைகளும் வழங்கி வைப்பு.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி ஜாமியுழ் ழாபிரீன் பெரிய மீரா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில், பிரதேச மக்களின் மருத்துவ நலனைக் கருத்தில் கொண்டு மாபெரும் இலவச வைத்திய முகாம் இன்று (06) சனிக்கிழமை பள்ளிவாயல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.ஏ.எம் சலீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள், ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இலவச வைத்திய முகாமில் வைத்தியர்களான நசீர்தீன், வைத்தியர் பரீட் அகமட், வைத்தியர் றிபாஸ், வைத்தியர் அலீமா, வைத்தியர் நபீல், வைத்தியர் பாத்திமா ஸீனா, வைத்தியர் நஸ்ரின் பானு, வைத்தியர் ஹனீஸ், வைத்தியர் முகைதீன், வைத்தியர் சிப்லி ஆகியோர் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

200 நபர்களுக்கான இலவச இரத்த பரிசோதனையை மெடி நெட் மற்றும் பிரைம் கெயார் நிறுவனத்தினர் வழங்கியதோடு, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நிறை மற்றும் குருதி அழுத்தம் (பிறசர்) பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

மேலும், தேவையுடைய 150 பேருக்கு ரூ.1100 பெறுமதியான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதொடு, பெருமளவிலான பொதுமக்கள் இலவச வைத்திய முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713864

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time