கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை; மத்தியஸ்த சபைக்கான – நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு.!!!
எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவின் மத்தியஸ்த சபைக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களுல் தவிசாளர், பிரதித்தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2025/06/25ம் திகதி புதன்கிழமை 9.30 மணிக்கு செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் MAC.றமீஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக உதவி மாவட்ட செயலாளர் கு.பிரணவன், கெளரவ அதிதிகள் மற்றும் ஏனைய அதிதிகளாக உதவிப்பிரதேச செயலாளர் ஜுமானா ஹஸீன், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் HMM.றுவைத், மாவட்ட நீதிமன்ற பதிவாளர் திருமதி செந்தூரன் சசிகலா, கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப்பணிப்பாளர் AMM.தாஹிர், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் MIM.ஆசாத், மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ML.ஆசாத், தியாவட்டவான் அரபா வித்தியாலய அதிபர் ALM.இஸ்மாயில், கேணிநகர் அல் மதீனா வித்தியாலய அதிபர் M.மீராமுகைதீன், மாவடிச்சேன அல் இக்பால் வித்தியாலய அதிபர் M.ஐயூப்கான் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள், புதிய மத்தியஸ்த சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
புதிய தவிசாளராக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் SHM.அரபாத் மெளலவி, பிரதித்தவிசாளராக கோ.ப.மத்தி பிரதேச செயலக உத்தியோகத்தர் MCM.மன்சூர் (DCO )
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





















