மீன் பிடி துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ; கடற்படை உதவியுடன் அணைக்கப்பட்டது.!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
காலி மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாத ஐந்து மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் இருந்த மீன் பிடி கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (10) ஏற்பட்ட திடீர் தீயை அணைக்கவும் தீ பரவாமல் தடுக்கவும் தெற்கு கடற்கரை கட்டளையைச் சேர்ந்த கடற்படை தீயணைப்பு குழுவினரால் உதவிகள் வழங்கப்பட்டது.
காலி மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் பயன்படுத்தப்படாத மீன்பிடி கப்பல்கள் வைக்கப்பட்டுள்ள முற்றத்தில் மீன்பிடி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக தெற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக பதிலளித்த கடற்படை இலங்கை கடற்படை கப்பலுடன் இணைக்கப்பட்ட தீயணைப்பு குழுவானது காலி நகர சபை தீயணைப்பு பிரிவுடன் இணைந்து காலி மாவட்ட அனைத்த முகாமைத்துவ பிரிவு மற்றும் மீனவ சமூகத்தின் ஆதரவுடன் ஐந்து மீன் பிடிக் கப்பல்களில் பரவிய தீயை வெற்றிகரமாக அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.