உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கைபேசியை திருடிய குற்றச்சாட்டில்; யாசகப் பெண்ணொருவரை பொலிஸார் எச்சரிக்கை.!!!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் யாசகப் பெண்ணொருவரை பொலிஸார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த எச்சரிக்கையினை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (14) யாசகப் பெண்ணுக்கு விடுத்துள்ளனர்.

ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரத்தில் யாசகம் கேட்டு வீடுவீடாக சென்ற பெண்ணொருவர் வீட்டிலிருந்த பெண்ணிடம் தேனீர் கேட்டுள்ளார்.

வீட்டிலிருந்த பெண் யாசகப் பெண் மீது பரிதாபம் கொண்டு தேனீர் தயாரிக்கச் சென்ற போது அங்கிருந்த கைபேசியை சூட்சமமாக திருடிச் சென்றுள்ளார்.

இவ்வாறு கைபேசியை திருடிச் சென்ற யாசகப் பெண் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வீ. கெமெரா மூலம் அடையாளம் காணப்பட்டார்.

அடையாளம் காணப்பட்ட யாசகப் பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த பெண் திருடிய கைபேசியை பொலிஸார் உரிமையாளரிடம் ஒப்படைத்து, திருடிய பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு யாசகம் கேட்டு வரும் சிலரால் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று தொடராக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714050

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time