மிக நீண்ட கால பிரச்சினைக்கு; உடனடித் தீர்வை பெற்றுக்கொடுத்தார் – அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா.!!!
அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் மிக நீண்ட காலமாக நிலவிவந்த வெள்ளநீர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை எட்டும் வகையில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் ஏ.எல்.எம்.அதாஉல்லா துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.
தில்லையாற்றின் இரு பக்கமும் நீர் வழிந்தோடுவதற்கு தடையாக காணப்பட்ட கற்கல், மண் மற்றும் நீர் தாவரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் அதாஉல்லா.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயர் யூ எல் உவைஸ், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத் திட்டத்தின் மூலம் எதிர்வரும் மழைகாலங்களில் வெள்ளநீர் தங்கு தடையின்றி இலகுவாக வழிந்தோட வழி ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






