இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்.!!!
இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.
இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் தூதுக்குழுத் தலைவர்களுடன் இணைந்து, இந்தியப் பிரதமரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் இலங்கைத் தூதுக்குழுவிற்கு அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கியுள்ளார்.
இந்த மாநாட்டில் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.