உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

பள்ளிவாயல் படுகொலை மற்றும் குருக்கள்மட கடத்தல் விவகாரங்கள் மீள விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமென சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு அரசை வேண்டிக் கொள்கிறது.!!!

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி காத்தான்குடி பிரதேசத்தின் இரண்டு பள்ளிவாயல்களில் இஷாவுடைய தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களின் மீது,

பாசிச விடுதலை புலி பயங்கரவாதிகள் தொடுத்த தாக்குதலின் காரணமாக படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்களை நினைவுகூறுகின்ற வகையில்,

இவ்வருடமும் 35 வது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தின நிகழ்வுகள் இன்றைய தினம் (03) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தன.

வரலாற்றில் காத்தான்குடி சமூகத்தின் மீது பாசிச விடுதலைப் புலி பயங்கரவாதிகளினால் திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட பல படுகொலைகளைச் சம்பவங்களில் இத்துயரச் சம்பவம் பிரதானமானதாகும்.

குறித்த துயரச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்களை நினைவு கூறும் முகமாகவும்,

அதே போல 1990 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி, கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 168 முஸ்லிம்கள், விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளினால் கடத்தப்பட்டு, வெட்டியும், துப்பாக்கியால் சுடப்பட்டும், உயிருடனும் படுகொலை செய்யப்பட்டு குருக்கள் மட கடற்கரையோரத்தில் புதைக்கப்பட்டதை கண்டித்தும் அதற்கான நீநியை வேண்டியும் மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் முன்றலில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதன் போது வருகை தந்த மக்களுக்கு தாகசாந்தியும் வழங்கப்பட்டிருந்தது.

மேற்படி உணர்பூர்வமான அனைத்து நிகழ்வுகளிலும்
சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு (OSPR) தமது பங்களிப்பினை வழங்கி இருந்தது.

குறித்த நகழ்வை ஒழங்கமைத்த காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை, குறிப்பிட்ட இரண்டு பள்ளிவாயல் நிர்வாகங்கள் மற்றும் சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் பங்களித்த அனைவருக்கும் நன்றியை கூறுகின்ற அதே வேளை,

பள்ளிவாயல் படுகொலை, குருக்கள் மட கடத்தல் விவகாரங்கள் மீள விசாரனை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறித்த விவகாரங்களில் குற்றமிழைத்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு (OSPR) அரசை வேண்டிக் கொள்கிறது..

தலைவர் / செயலாளர்,
சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு (OSPR)
காத்தான்குடி.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713949

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time