மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து; மின்சாரத் தூணுடன் மோதியதில் – 17 வயது சிறுவன் பரிதாப பலி.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று (04) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் என்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



