உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

வீட்டுக்கு ஒரு சாரதியை உருவாக்கும் திட்டம் சமூக செயற்பாட்டாளர் முஜீப் ஜூனைட் ஆரம்பித்து வைப்பு.!!!

எம் எஸ் எம் நூர்தீன்

காத்தான்குடியில் வீட்டுக்கு ஒரு சிறந்த சாரதியை உருவாக்கும் திட்டத்தினை சமூக செயற்பாட்டாளர் முஜீப் ஜூனைட் இலவசமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

சிறந்த சாரதிகளை உருவாக்குதல், இளைஞர்கள் மத்தியில் போதை வஸ்து பாவனையை ஒழித்தல், வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், அரச உத்தியோகத்தர்களுக்கு பகுதி நேர தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல், நேர ஒழுங்குகளை பின்பற்றுவதை ஊக்குவித்தல் என்பன போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சாரதி பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களைக் கொண்ட இந்த இலவச சாரதி பயிற்சி நெறியில் முதல் தடவையாக 17 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று(21)  காலை காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் கடற்கரையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் இதன் ஏற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமான முஜீப் ஜூனைட் சட்டத்தரணி முகைதீன் சாலி மற்றும் நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719037

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time