உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் கைப்பணிக் கண்காட்சியும், இப்தார் நிகழ்வும்.!!!

எம்.ஐ.அப்துல் நஸாா்

காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் கைப்பணிக் கண்காட்சியும் இப்தார் நிகழ்வும் சனிக்கிழமை (15) முஸ்லிம் பெண்கள் காப்பகத்தில் அதன் பணிப்பாளா் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் சல்மா அமீா் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக அல்ஹாஜ் எஸ்.எம்.நஸீா்கான் மற்றும் அவரது குடும்பத்தினா் கலந்து கொண்டிருந்தனா்.

நிகழ்வின் இப்தாா் சிந்தைனை ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான அலிம்கள் அமைப்பின் தலைவா் மௌலவி எஸ்.எச்.ஷாஜஹான் (பலாஹி) அவா்களால் வழங்கப்பட்டது.

இப்தாா் நிகழ்வினைத் தொடா்ந்து

முஸ்லிம் பெண்கள் காப்பகத்தில் பராமாிக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கைப்பணிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சிக்கூடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடா்ந்து கைப்பணிப் பொருட்களின் விற்பனையும் இடம்பெற்றது. அடுத்துவரும் சல தினங்களுக்கு கைப்பணிப் பொருட்களின் விற்பனை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளா்கள் தொிவித்தனா்.

இந் நிகழ்வில் சா்வமதத் தலைவா்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாாிகள், வா்த்தகா்கள், ஊா் பிரமுகா்கள், ஊடகவியலாளா்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்

கடந்த ஏழு ஆண்டுகளாக முஸ்லிம் பெண்கள் காப்பகம் காத்தான்குடியில் இயங்கி வருவதோடு, தற்போது 35 போ் பாராமாிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களுள் 03 போ் மாத்திரமே காத்தான்குடியைச் சோ்ந்தவா்களாவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718869

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time