தேசிய மட்டத்தில் சாதனை: காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் அகில இலங்கையில் முதலாம் இடம்.!!!
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வர்த்தகப் பிரிவில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் முகமது சுபைதீன் முகமது பர்தான் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், வணிகக் கல்வி மற்றும் கணக்கியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற இவர், 3.0412 என்ற உயர்ந்த Z-Score புள்ளிகளைப் பெற்று இந்த சிறப்பான சாதனையை எட்டியுள்ளார்.
இம்மாணவனின் அபார சாதனை காத்தான்குடி மக்களிடமும் கல்வி சமூகத்தினரிடமும் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் உழைப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், பெற்றோரின் ஆதரவும் இந்த வெற்றிக்கு காரணமாகும் என கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றிருப்பது அந்தப் பாடசாலைக்கும், காத்தான்குடி பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது.

