உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி: இரண்டாவது நாளாக அகழ்வு.!!!

1990ஆம் ஆண்டு 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி அகழ்வு பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வு நடவடிக்கை அதிகாரிகளின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

1990ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவு செய்து காத்தான்குடி நோக்கி திரும்பியவர்கள் உள்ளிட்ட 170 முஸ்லிம்கள் குருக்கள்மடம் பகுதியில் வழிமறிக்கப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருப்பது, இதற்காக நீண்டகாலமாக முயற்சித்து வந்தவர்களுக்கு கிடைத்த ஆரம்ப வெற்றியாக பார்க்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 880068

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time