உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

தேசிய மக்கள் சக்தியினரின் தலையீட்டினால்; காத்தான்குடி மத்திய வீதி – வடிகால் பிரச்சனைக்கு தீர்வு.!!!

உலக வங்கியின் நிதி அளிப்பின் கீழ் ICDP வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பல வீதிகளின் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதில் காத்தான்குடி மத்திய வீதி நிர்மாணத்தில் புதிதாக வடிகால் அமைப்பு செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கான கள விஜயமும் சந்திப்பும் இன்று (24) நடைபெற்றது.

இவ் விஜயத்தில் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பு செயலாளர் UH. அப்துல்லா ICDP திட்ட மட்டக்களப்பு மாவட்ட திட்ட முகாமையாளர் மற்றும் அதன் பணி குழுவினர் காத்தான்குடி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் M. நசீர் மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ACM.லத்தீப் பூநொச்சிமுனை பிரதேச தேசிய மக்கள் சக்தி குழு தலைவரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஆதம் எஹ்யா, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பர்சாத் உட்பட பிரதேச சமூக அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் குறித்த வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவன பொறியியலாளர் மற்றும் அவர்களது பனிக் குழுவினர் வீதியில் வசிக்கும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

மத்திய வீதியானது சுமார் 475 மீட்டர் நீளமானதாகும் இத்திட்ட த்திற்காக கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மதிப்பீட்டு அறிக்கை மேற்கொள்ளப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இம் மத்திய வீதியின் இரு பக்க கான்கள் அமைப்பதற்கு சுமார் 800 மீட்டர் வடிகான்களுக்கான மதிப்பீடும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் வீதியின் ஒரு பக்கத்துக்கு மட்டுமே தற்போது வடிகால் அமைக்கப்படுவதாகவும் மாரி காலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பினை தடுப்பதற்கு மறு பக்கத்துக்கும் வடிகால் அமைக்கப்பட வேண்டுமென இப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஏற்கனவே RDA இனால் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த மறுபக்க வடிகால் அமைப்பானது அண்மையில் அரசியல் அழுத்தம் காரணமாக வேறு வீதிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் கண்டறியப்பட்டது.

முக்கியத்துவம் மிக்க பிரதான வீதியான இவ் வீதிக்கு இரு பக்கமும் வடிகால் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் இங்கு வருகை தந்திருந்த அனைவராலும் வலியுறுத்தப்பட்டு உரிய அதிகாரிகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் இவ் வீதியின் நிலைபேறான அபிவிருத்திக்கு ஏற்கனவே மூல மதிப்பிட்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தன் அடிப்படையில் இரு பக்கமும் வடிகால் நிர்மானம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இப்பிரதேசங்களில் நடைபெற்ற அபிவிருத்திகளில் ஏற்பட்ட தேவையற்ற சுயநல அரசியல் தலையீடுகள் இனி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடைபெறாது என்ற வாக்குறுதியும் இணைப்புச் செயலாளர் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713969

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time