உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கடற்படையின் 1148வது நீர் சுத்திகரிப்பு நிலையம்: பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிப்பு.!!!

(கற்பிட்டி நிருபர் – சியாஜ்)

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அரலகங்வில கிராமத்தில் நிறுவப்பட்ட 1148வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம், வியாழக்கிழமை (29) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப ஆதரவுடன், சுகாதார அமைச்சின் தலைமையிலும், ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடனும் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையம் இணைந்து, கடற்படை இதுவரை நாடு முழுவதும் 1148 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிதாக திறந்து வைக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம், திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவின் அரலகங்வில பகுதியில் வசிக்கும் பெருந்தொகையான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பூர்த்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703744

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time