உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 27, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

நெல்லிக்காடு கிணறு பெண் கொலை: சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகக்கூடாது – மட்டக்களப்பில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்.!!!

மட்டக்களப்பில் இடம்பெற்ற நெல்லிக்காடு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்றும் இச்சம்பவத்தில் நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி  வெள்ளிக்கிழமை (27)  மட்டக்களப்பு நகரில்  பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

வெல்லாவெளி 40 ம் கிராம மக்கள் தலமையில் இந்த  ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே கிணற்றில் இன்னுமொரு பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த பாரிய கொள்ளைச் சம்பவங்கள், அவற்றுடன் தொடர்புபட்ட கொலையின் பின்னணி கண்டறியப்பட்டு, பின்னர், பிரதான சந்தேக நபர்கள் மூவர் அடங்கிய ஆறு  பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர்கள் மூவரையும் 4 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கும், மற்றைய இருவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது, சந்தேக நபர்களுக்கு உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும், மாவட்டத்தில் இனி இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாவண்ணம் பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
துணை போகாதே துணை போகாதே கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் “பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் நீதியை நிலைநாட்ட அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம் கை வைக்காதே கை வைக்காதே பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே வழங்கு வழங்கு விரைவாக நீதியை வழங்கு போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, காந்தி பூங்காவில் இருந்து பழைய (கச்சேரி) மாவட்ட செயலகம் வரை பேரணியாக ஆர்ப்பாட்டக்காரர்கள்
சென்று,

இது தொடர்பில் வழங்கப்படுகின்ற நீதியானது, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கவேண்டும் எனவும், பொதுமக்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்க்கிடையிலான கலந்துரையாடல் பழைய கச்சேரி மாவட்ட செயலக  வெளி வளாகம் முன்பாக வந்து மக்களோடு கலந்துரையாடினார் பின்னர் அவர்கள் மகஜர் ஒன்றையும் அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

மேலும், சந்தேக நபர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, வழங்கப்படுகின்ற தண்டனைகள் மூலம் மேற்படி சொன்ன சந்தேகங்களை நிவர்த்திக்க வழி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டக்காரர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபைத் தவிசாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராசமாணிக்கம் சாணக்கியன் ஞானமுத்து ஸ்ரீ நேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 724551

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time