உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

காரைதீவு பிரதேச சபையில் ஈரான் போரில் உயிரிழந்த மாணவர்கள், சிறுவர்களுக்கு மௌன அஞ்சலி.!!!

-நூருல் ஹுதா உமர்-

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று (26) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிலையில், ஈரான் தொடர்பான போரினால் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய மாதாந்த கூட்டம் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில், முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய சபை உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

போரினால் பாதிக்கப்பட்ட நிர்பராத பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழப்பது மிகவும் வேதனையூட்டும் விஷயமாகும் எனவும், மனிதாபிமான அடிப்படையில் இவ்வஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், உலகளாவிய மோதல்கள் நிறுத்தப்பட்டு, மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விருப்பமும் இவ்வஞ்சலியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாக முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய சபை உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு, மனித உரிமைகள் மற்றும் உலக அமைதியின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்தது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1075399

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time