இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: ஈரான் எச்சரிக்கை.!!!
ஈரானின் ஏவுகணை படை தளபதி சமீபத்தில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், இஸ்ரேலிய வான் பரப்பு தற்போது தங்களது ஏவுகணைகளின் முழு கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்று முதல் இஸ்ரேலுக்கு எதிராக புதிய வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இது ஈரானின் முன்னேற்றமான ஏவுகணை தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வாரம் தோறும் புதிய ஏவுகணைகள் மற்றும் போர் முனைகள் திறக்கப்பட்டு வருவதாகவும், அவை எதிரி நாடுகளை மட்டுமல்லாது, ஈரானுக்கு எதிராக ஆதரவளிக்கும் நாடுகளின் நிதி அமைப்புகள் மற்றும் முதலீடுகளையும் குறிவைத்து தாக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த போர் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும் என்றும், அதற்காக ஈரான் முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஈரானின் மின்சார மற்றும் எரிவாயு நிலையங்கள் மீண்டும் தாக்கப்பட்டால், அதேபோன்று எதிரி நாடுகளின் முக்கிய இலக்குகளை கடுமையாக தாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
“எதிரிகளுக்கு எங்கு தாக்கினால் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை ஈரான் நன்கு அறிவது” என்றும், “நாட்டின் மக்களின் தியாகங்கள் இறுதியில் வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது.




