புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற; முப்பெரும் விழா.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் முப்பெரும் விழா இன்று (18) பள்ளிவாயலின் தலைவர் எம் ஐ எம் ஜவாஹிர் தலைமையில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் கீழ் இயங்குகின்ற ஹிக்மா பகுதி நேர அல் – குர்ஆன் மனனபீடத்தில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த மூன்று மாணவர்களை கௌரவித்தும் ஏனைய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வும், 2024 ஆம் ஆண்டு காத்தான்குடி குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி சங்கத்தினால் நடத்தப்பட்ட இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த பிர்தௌஸ் மத்ரஸா மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வும், 2024 ரமழான் மாதம் நடைபெற்ற பெண்களுக்கான விசேட மார்க்க விளக்க வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வும் முப்பெரும் விழாவாக இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாயலின் ஆயுட்கால தலைவருமான கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாகவும், காத்தான்குடி நகரசபையின் நகர முதல்வர் எஸ் எச் எம் அஸ்பர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டதோடு, நகர சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பள்ளிவாயலின் நிர்வாகிகள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வின் விசேட சொற்பொழிவை ஜாமிஆ ஹமீதிய்யா அறபுக் கலாபீடத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க், அல் ஹாபிழ் எஸ் எச் எம் றமீஸ் ஜமாலி அவர்கள் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.