காத்தான்குடியில் 50 வருடங்களாக; பள்ளிவாயலில் இமாமாக கடமையாற்றிய – ஆதம்லெப்பை மெளலவிக்கு கெளரவிப்பு.!!!
(ளம்.ரி.எம்.யூனுஸ்)
புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாயலில் 50 வருடங்களுக்கு மேலாக இமாமாகவும், பல்வேறுபட்ட சமூக நிறுவனங்களில் பதவி தாங்குணராகவும், உறுப்பினராகவும் இருந்து செயற்பட்டு, பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்ட, புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலின் ஆயுட்கால இமாம் அல்ஹாஜ் மௌலவி ஏ எல் ஆதம் லெப்பை முஸ்தபா (பலாஹி) அவர்களுக்கு இன்று (18) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து “வாழும் போதே வாழ்த்துவோம்” அதியுயர் கௌரவிப்பு நிகழ்வு பள்ளிவாயலின் தலைவர் எம் ஐ எம் ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் ஆயுட்கால தலைவருமான கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதோடு, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள், சமூக நிறுவனங்களின் நிருவாகிகள், ஊர்ப் பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த அதியுயர் கெளரவிப்பு நிகழ்வில் மெளலவி ஆதம் லெப்பை பலாஹி அவர்கள் கடந்த காலங்களில் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள், பணிகள் தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம் சி எம் சத்தார் அவர்களினால் உரை நிகழ்தப்பட்டதோடு, விஷேட துஆப் பிரார்த்தனையும் மெளலவி அமீன் பலாஹி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
குறித்த கெளரவிப்பு நிகழ்வில் 50 வருடங்களுக்கு மேலாக பள்ளிவாயலில் கடமை புரிந்தமைக்காக பள்ளிவாயல் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுப்படிகமும் வழங்கி வைக்கப்பட்டது.