உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

நிந்தவூர் பிரதேச சபையின்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் – சத்திய பிரமாணம்.!!!

(சுலைமான் றாபி)

கடந்த மே மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கௌரவ உறுப்பினர்கள் இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை முன்னிலையில், சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் 9 பிரதேச சபைகளைச் சேர்ந்த 33 உறுப்பினர்கள் இந்த சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் நிந்தவூர் பிரதேச சபை சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எம். அன்சார், எம்.ஏ.எம். றசீன், ஷாபி சுலைமான் மற்றும் பட்டியல் மூலம் தெரிவான றிஹானா பாயிஸ் ஆகியோர் சத்தியப் பிரமாணம் செய்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714038

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time