உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஓட்டமாவடியில் தீப்பற்றி எரிந்த வீடு; சந்தேகத்தில் வீட்டு உரிமையாளர் கைது.!!!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தீப்பற்றிய வீட்டை ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்த தீ வைப்பு சம்பவத்தில் வீட்டு உரிமையாளரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த இடத்துக்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703246

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time