ஓட்டமாவடி பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும்; முன்னாள் அமைச்சர் அமீர் அலி.!!!
எவரும் குழப்பமடையத்தேவையில்லை : ஓட்டமாவடி பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் – வெற்றி வேட்பாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி உறுதி
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்காக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய வேட்பாளர்களுக்கான சந்திப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களின் ஆலோசனைப்படி இன்று (10) இடம்பெற்றது.
இச்சந்தர்ப்பத்தில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன், நிச்சயமாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் எவரும் குழப்பமடையத்தேவையில்லை எனவும் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, எதிர்காலத்தில் பாரபட்சமின்றி எமது பிரதேச அபிவிருத்தியில் அனைவரையும் இணைத்துப் பயணிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
