ஊழல் ஒழிப்பில் அதிகாரிகள் பொறுப்பேற்பு அவசியம் – ஜனாதிபதி செயலாளர்.!!!
இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரச சேவையைக் கட்டியெழுப்பும் நோக்கில், 250 அரச நிறுவனங்களில் ‘உள்ளக விவகாரப் பிரிவுகளை’ (Internal Affairs Units) நிறுவுவதற்கான விசேட செயலமர்வு இன்று (29) நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரச அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டின் ஊழல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121ஆவது இடத்தில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கடந்த கால மக்கள் எழுச்சி ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, ஊழல் அதிகாரிகளுக்கும் எதிரானதாக இருந்ததை நினைவூட்டினார்.
‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, அரச சேவைக்குள் நேர்மையான கலாசாரத்தை உருவாக்குவதோடு, பொதுமக்களின் புகார்களை கையாள்வதற்கான ஒரு தளமாகவும் அமையும் என அவர் தெரிவித்தார்.















