உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஓமான் கடற்படையின் ‘AL SEEB’ போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை.!!!

(கற்பிட்டி நிருபர் – சியாஜ்)

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘AL SEEB’ விநியோக மற்றும் சேவை விஜயத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (22) இலங்கைக்கு வந்தடைந்தது. குறித்த போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தபோது, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கேற்ப சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

75 மீட்டர் நீளமுடைய ‘AL SEEB’ போர்க்கப்பலுக்கு லெப்டினன்ட் கமாண்டர் ஹமத் பின் முகம்மது அல்தர்மாகி (Hamad Bin Mohammed Aldarmaki) தலைமை தாங்குகிறார்.

இந்த விஜயம், இலங்கை மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையில் தொழில்முறை அறிவு பரிமாற்றம், அனுபவ பகிர்வு மற்றும் இயங்குதன்மையை மேலும் மேம்படுத்தும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் குழுவினர் கொழும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களைப் பார்வையிட திட்டமிட்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703721

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time