உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
சமூக ஊடக உலகில் பெண்கள்: வாய்ப்புகளும் அதிகரிக்கும் சவால்களும்.!!!
Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!

Share :

“ஒப்பரேஷன் 91வது அலை” தொடக்கம்: அமெரிக்கா–இஸ்ரேல் தளங்கள் இலக்கு என ஈரான் அறிவிப்பு.!!!

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், “ஒப்பரேஷன் 91வது அலை” தொடங்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈரான் இராணுவப் பேச்சாளர் பல்வேறு அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய இராணுவ மற்றும் தொழிற்துறை தளங்கள் இலக்காக தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலின்படி, அபுதாபியில் உள்ள அமெரிக்க எஃகு ஆலைகள் மற்றும் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க அலுமினியத் தொழிற்சாலைகள் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலின் ரஃபேல் ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் மனாமா அருகே உள்ள அமெரிக்க இராணுவ மறைவிடமும் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலில் டஜன் கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அல்-தான்ஃப், பால்மாச்சிம் மற்றும் பென் குரியன் விமானத் தளங்கள் உள்ளிட்ட பல முக்கிய இராணுவத் தளங்களும் தாக்குதலின் இலக்குகளாக இருந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. அதேபோல், டெல் அவிவ், ஹைஃபா, எய்லாட், நெகேவ் மற்றும் பீர்ஷேபா பகுதிகளில் உள்ள இராணுவக் குவிப்புகளும் தாக்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

மேலும், அஹ்மத் அல்-ஜாபர், அலி அல்-சலேம் மற்றும் அல்-கர்ஜ் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் இலக்காக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜாஃபர் தளத்தில் இருந்த முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பு முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், ஜோர்டானின் அல்-அஸ்ராக் தளத்தில் உள்ள அமெரிக்கப் போர் விமான நிலைகளும் தாக்கப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.

இதனிடையே, ஈரான் மீது பறந்த 4 ட்ரோன்கள் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவும் இஸ்ரேல் ஆட்சியும் மிகக் கடுமையான மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்களை எதிர்பார்க்க வேண்டும் என ஈரான் இராணுவப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய இராணுவ மற்றும் முக்கிய தளங்களுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 737945

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time