உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: அமெரிக்கப் பத்திரிகையாளர் அப்பி மார்ட்டின் கடும் குற்றச்சாட்டு.!!!

-இம்ரான் பாரூக்-

அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர் அப்பி மார்ட்டின், டிரம்பைப் பதவி நீக்கம் செய்து மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

தனது X தளத்தில்: இந்த ஜனாதிபதி மனநல 100% மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் போரையும் குழப்பமான சூழலை உருவாக்குவதன் முலம் ரசிக்கும் மனநிலையில் இருப்பது திண்ணம் என்றும் அவர் கூறினார்.

ஈரான் அமெரிக்காவிற்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. இந்த பூமியில் உள்ள எந்தவொரு அறிவுள்ள மற்றும் மனச்சாட்சியும் உள்ள நபரும் வெனிசுலா, ஈரான் மற்றும் அடுத்து கியூபா மக்களுக்கு எதிரான டிரம்பின் அராஜகத்தை ஆதரிக்க மாட்டார்கள்.

டிரம்பைப் பதவி நீக்கம் செய்யக் கோரி அமெரிக்க மக்கள் நாளை ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு மரியாதையான எதிர்காலத்தை விரும்பும் ஒவ்வொரு அமெரிக்கரும் கலந்து கொள்வார்கள். இந்த மனநிலை பிறழ்ந்த நபருக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்.

டிரம்பை அவசரமாக ஒரு மனநல மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வயது காரணமாக சுய புத்தியை இழந்துவிட்டார். உலகில் தான் நாசகார வேலையில் முழுமூச்சுடன் ஈடுபட்டுக்கொண்டிருப்பது அவருக்கே தெரியதில்லை.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810405

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time