உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள்; வியாபார நிலையங்கள் – உணவகங்களில் திடீர் சோதனை.!!!

பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்தியத்தில் உள்ள வியாபார நிலையங்கள், உணவகங்களில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைவாக கல்முனை பொதுச் சந்தை பகுதிகளில் இன்று (22) திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ,எல்.எம்.லபீர் தலையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த உருளைக்கிழங்கு உட்பட உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு திருத்த வழிமுறைகளுக்கு அமைவாக ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714102

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time