பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய பௌத்த தேரர்; காத்தான்குடியில் சம்பவம்.!!!
(ஜே.கே)
பௌத்த மத தலைவர் ஒருவர் பொலிஸ் சார்ஜன் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கிய சம்பவம் இன்று காலை (31) காத்தான்குடியில் பதிவாகியுள்ளது
பலாங்கொட ஸ்ரீ சுதர்ம ராம விகாரையின் விஹாராதிபதியும், மனிதநேய செயற்பாட்டாளருமான பொகவந்தலாக ராகுல தேரரே இவ்வாறு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த பொலிஸ் சார்ஜனுக்கு மன்னிப்பு வழங்கினார் .
காத்தான்குடி கடற்கரை வீதியில் குறித்த பௌத்த மத தலைவர் உணவு விடுதியொன்றில் உரையாடிக் கொண்டிருந்தபோது மேற்படி பொலிஸ் சார்ஜன் குறித்த பௌத்த மத தலைவரின் மீது அவதூறான வார்த்தைகளை பேசி அவரை சிரமத்திற்கு உட்படுத்திய போது குறித்த பொலிஸ் சார்ஜன் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு தன்னை குறித்த பொலிஸ் சார்ஜன் இவ்வாறு சிரமத்திற்க்கு உட்படுத்தியதாக முறையிட்டார்
இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு குறித்த தகவலை மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்த போது குறித்த சார்ஜன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன் பொகவந்தலாக ராகுல தேரரிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இதன் மூலம் குறித்த பொலிஸ் சார்ஜன் என் மீது எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கை இல்லாமல் செய்யப்பட்டதுடன் பிரச்சினை சுமூகமாகவும் தீர்த்து வைக்கப்பட்டது.
இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்திய காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ ரத்னாயகாவிற்கு பொகவந்தலாவ ராகுல தேரர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார் .
பொகவந்தலாவ ராகுல் தேரருடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் மெளலவி தாசிம் உட்பட சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

